உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / விஜயகாந்த் பிறந்த நாள் விழா; தே.மு.தி.க. அன்னதானம்

விஜயகாந்த் பிறந்த நாள் விழா; தே.மு.தி.க. அன்னதானம்

கோத்தகிரி; கோத்தகிரியில் தே.மு.தி.க., நிறுவன தலைவர் விஜய்காந்தின், 73வது பிறந்த நாளை முன்னிட்டு, பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, கோத்தகிரி ஒன்றிய செயலாளர் ரவி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பத்மநாபன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கட்சி கொடியேற்றி, விஜய்காந்த் படத்திற்கு மாலை அணிவித்து, அன்னதானத்தை துவக்கி வைத்தார். முன்னதாக, விஜய்காந்தின் மக்கள் சேவை குறித்து நினைவு கூறப்பட்டது. அதில், மாவட்ட துணை செயலாளர் ரமேஷ், கட்சி நிர்வாகிகள் செல்வராஜ், மகேஷ் மற்றும் பரணீஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை