விஜயகாந்த் நினைவு நாள்; தே.மு.தி.க., மவுன ஊர்வலம்
கோத்தகிரி; கோத்தகிரியில் தே.மு.தி.க., நிறுவனத் தலைவர் விஜயகாந்தின், முதலாவது நினைவு நாள் கட்சியின் சார்பில் அனுசரிக்கப்பட்டது.கோத்தகிரி பஸ் நிலையத்தில் வைக்கப்பட்ட விஜயகாந்த் படத்திற்கு, பூஜை செய்து, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. கோத்தகிரி ஒன்றிய செயலாளர் ரவி தலைமை வகித்தார். கீழ் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் பாலு மற்றும் கோத்தகிரி பேரூராட்சி செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், விஜயகாந்தின் சேவை மற்றும் மக்கள் நலன் குறித்து அவர் ஆற்றிய பணிகள் குறித்து நினைவு கூறப்பட்டது. முன்னதாக, கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் இருந்து, மார்க்கெட் வழியாக, மவுன ஊர்வலம் நடந்தது.விஜயகாந்தின் பிறந்த நாளையொட்டி, முன்னாள் பேரூராட்சி செயலாளர் ரமேஷ், தனது உடல் உறுப்புகளை தானம் செய்தார். இதில், அவை தலைவர் பரமசிவம், மாநில செயற்குழு உறுப்பினர் செல்வம், தலைமை கழக பேச்சாளர் சத்திய சிவம் உட்பட திரளான கட்சியினர் பங்கேற்றனர்.