உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கூடலுாரில் கிராம நிர்வாக அலுவலர்கள் இடமாற்றம்

கூடலுாரில் கிராம நிர்வாக அலுவலர்கள் இடமாற்றம்

கூடலுார்; கூடலுார் தாலுகா பகுதியில் பணியாற்றி வரும் ஐந்து கிராம நிர்வாக அலுவலர்களை இடமாற்றம் செய்து, கூடலுார் ஆர்.டி.ஓ., செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கூடலுார்- 1 பகுதியில் பணியாற்றி வந்த மோகன், கூடலுார்- 2 பகுதியின், வி.ஏ.ஓ., வாக மாற்றப்பட்டுள்ளார். கூடலுார்- 2 பகுதியில் பணியாற்றி வந்த ராஜேஷ் பாடந்துறை வி.ஏ.ஓ., வாக மாற்றப்பட்டுள்ளார். பாடந்துறை வி.ஏ.ஓ., பார்வதி தேவாலா- 1 பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். தேவாலா- 1 பகுதியில் பணியாற்றி வந்த ேஷாபா, தேவாலா- 2 பகுதியின் கிராம நிர்வாக அலுவலராக மாற்றப்பட்டுள்ளார்.தேவாலா- 2 பகுதியில், பணியாற்றி வந்த நித்தியானந்தன் கூடலுார்-1 பகுதியின் வி.ஏ.ஓ., வாக மாற்றப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ