உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஆருவ ஒசஹட்டியில் சிறுத்தை அச்சத்தில் கிராம மக்கள்

ஆருவ ஒசஹட்டியில் சிறுத்தை அச்சத்தில் கிராம மக்கள்

கோத்தகிரி, ; கோத்தகிரி ஆருவ ஒசஹட்டி கிராம குடியிருப்புகளில் சிறுத்தை நடமாடுவதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட, கட்டபெட்டு ஆருவ ஒசஹட்டி கிராமத்தில், 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. குன்னுார் நகருக்கு முக்கிய நீராதாரமாக விளக்கும் ரேலியா அணையை ஒட்டி கிராமம் அமைந்துள்ளது. இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் சிறுத்தை, கிராம குடியிருப்புகளில் நடமாடி வருவது தொடர்கிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, கிராம சாலையில் நடந்து சென்ற சிறுத்தை, காம்பவுண்டை தாண்டி, குடியிருப்புகள் புகுந்துள்ளது. அச்சம் அடைந்த மக்கள் சப்தம் போட்டதால் சிறுத்தை சென்றது. அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பு, வனத்துறை கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை