| ADDED : நவ 27, 2025 04:42 AM
ஊட்டி: ஊட்டியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக கால்பந்து போட்டி நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி , நீலகிரியில் நவ., 4ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான பணிகளை ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கி வருகிறார்கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களும் பெறப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, வாக்காளர்களிடையே சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக பல்வேறு கட்டங்களாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஊட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட எச்.ஏ.டி.பி., விளையாட்டு மைதானத்தில் விழிப்புணர்வு கால்பந்து போட்டி நடந்தது. போட்டியை, ஊட்டி ஆர்.டி.ஓ., டினு அரவிந்த் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் உட்பட பலர் பங்கேற்றனர்.