உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை முறை செயல் விளக்கம்

வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை முறை செயல் விளக்கம்

ஊட்டி : ஊட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில், வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை முறையில் வாக்களிப்பது குறித்து, செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.தேசிய தேர்தல் ஆணையம், தகுதியான அனைவரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதன்படி, 'இந்தியாவின் தேர்தல்கள்' என்ற தலைப்பில், வினாடி வினா போட்டி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.அதன் ஒரு கட்டமாக, வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை முறையில், வாக்காளர்கள், ஏழு நொடிகளில் வாக்களித்த வேட்பாளரின் வரிசை எண், பெயர் மற்றும் சின்னம் ஆகியவை அச்சிட்டு திரையில் வருவதை சரிபார்த்து உறுதிசெய்ய செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. 'அச்சிட்ட காகிதம் கண்ணாடி வழியே, திரையில் பார்க்க மட்டுமே முடியும். அந்த சீட்டு வாக்காளருக்கு தரப்பட மாட்டாது,' என, செயல் விளக்கத்தில் வாக்காளருக்கு எடுத்தரைக்கப்பட்டது. இதில், ஏராளமானோர் பலனடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை