உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வார்டு கிராம சபை கூட்டம்

வார்டு கிராம சபை கூட்டம்

குன்னூர்: குன்னூர் அதிகரட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 12 வது வார்டு கோடேரி கிராமத்தில் வார்டு கிராமசபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வார்டு உறுப்பினர் மனோகரன் தலைமை வகித்தார். ஊருக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. கிராமத்தில் பழுதடைந்த குடிநீர் குழாய்கள் முழுமையாக மாற்றி புதிய குழாய்கள் அமைப்பது; பழைய குப்பை தொட்டிகளை அகற்றி புதிய குப்பைத் தொட்டிகள் வைப்பது; சமுதாயக்கூடம் செல்லும் இடத்தில் உள்ள உயரழுத்த மின் கம்பிகளை மாற்றி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ