உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அபாயத்தில் வாட்டர் ஏ.டி.எம்.,:பொதுமக்கள் அச்சம்

அபாயத்தில் வாட்டர் ஏ.டி.எம்.,:பொதுமக்கள் அச்சம்

பந்தலூர்: பந்தலூர் பஜாரில் நெல்லியாலம் நகராட்சி வணிக வளாகம் முன்பாக, நடைபாதையில் வாட்டர் ஏ.டி.எம். இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தாத நிலையில், வீணாகி வரும் இந்த இயந்திரத்தை அகற்ற வலியுறுத்தப்பட்டது. நகராட்சி வணிக வளாக வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும், இந்த வாட்டர் ஏ.டி.எம். இயந்திரத்தை அகற்ற வியாபாரிகள் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டருக்கு, மனு கொடுக்கப்பட்டது. உடனடியாக அகற்றப்படும் என கலெக்டரும் உறுதி அளித்தார். ஆனால், இதுவரை அகற்றப்படாத நிலையில், தற்போது இதன் பாகங்கள் உடைந்து கீழே விழுந்து வருகிறது. சாலை ஓரத்தில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு, இடையூறாக உள்ள இந்த இயந்திரத்தை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். என, வியா பாரிகள் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை