உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / முருகன் கோவில்களில் திருக்கல்யாண நிகழ்ச்சி

முருகன் கோவில்களில் திருக்கல்யாண நிகழ்ச்சி

ஊட்டி: நீலகிரியில் உள்ள முருகன் கோவில்களில் நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தமிழ் கடவுளாகப் போற்றப்படும் முருகப்பெருமான், அசுரன் சூரபத்மனை வதம் செய்த நாள் சூரசம்ஹாரமாகும். தீமையை ஒழித்து தர்மத்தை நிலைநாட்டிய நிகழ்வாக கருதப்படுகிறது. முருகன் கோவில்களில் நேற்று முன்தினம் சூரசம்காரம் நிகழ்ச்சி நடந்தது. திருக்கல்யாண நிகழ்ச்சி இந்நிலையில், ஏழாம் நாளான நேற்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. வள்ளி தெய்வானை சமேத முருக பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பிரசாதம் வாங்கிச் சென்றனர். ஊட்டி அடுத்த மஞ்சூர் அன்னமலை முருகன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதா னம் வழங்கப்பட்டது. குன்னுார், கூடலுார் உட்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு முருகன் கோவில்களிலும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இன்று 29ம் தேதி விடையாற்றி உற்சவம் நிகழ்ச்சியுடன் கந்த சஷ்டி விழா முடிகிறது. சூரசம்ஹார நிகழ்விற்காக முருக பக்தர்கள் கடந்த ஒரு வாரமாக கந்த சஷ்டி விரதம் இருந்து நேற்றுடன் நிறைவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை