மேலும் செய்திகள்
வீட்டை நோட்டமிட்ட கட்டை கொம்பனால் அச்சம்
20-Dec-2025
ஸ்வரலயா நடன சங்கீத உற்சவம் 21ல் துவக்கம்
20-Dec-2025
வட்டார வளர்ச்சி ஒருங்கிணைப்பு கூட்டம்
20-Dec-2025
ஊட்டி;ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பனி சற்று குறைந்த நிலையில், கேரட் தோட்டத்தில் களை எடுத்து தோட்ட பராமரிப்பு பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.நீலகிரியில் தேயிலைக்கு அடுத்தப்படியாக, மலை காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது. நடப்பாண்டு கேரட், அதிக பரப்பளவில் பயிர் செய்து, விவசாயிகள் பராமரித்து வருகின்றனர்.ஊட்டி முத்தோரை பாலாடா, நஞ்சநாடு மற்றும் அணிக்கொரை உள்ளிட்ட பகுதிகளை அடுத்து, ஊட்டி நகரத்தை ஒட்டி, காகா தோப்பு பகுதியில் அதிக பரப்பளவில் கேரட் பயிரிடப்பட்டுள்ளது.ஊட்டி உழவர் சந்தையில், ஒரு கிலோ கேரட், 45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தற்போது, ஊட்டியில் பனி சற்று குறைந்து வரும் நிலையில், கேரட் தோட்டத்தில் களை எடுத்து, உரமிட்டு பராமரிப்பு பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
20-Dec-2025
20-Dec-2025
20-Dec-2025