வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ManiMurugan Murugan அருமை வாழ்த்திக்கள்
குன்னுார்; குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரியில், புதிய கமாண்டன்ட்டாக லெப். ஜெனரல் மணீஷ்யெரி பொறுப்பேற்றார். நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரியில், நம் நாடு மட்டுமின்றி, நட்பு நாடுகளின் இளநிலை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கல்லுாரியின் கமாண்டன்ட் லெப். ஜெனரல் வீரேந்திர வாட்சின், 3 ஆண்டு பதவிக்காலம் முடிந்த நிலையில், நேற்று லெப்.ஜெனரல் மணீஷ்யெரி புதிய கமாண்டன்ட்டாக பொறுப்பேற்றார். அவரிடம், முன்னாள் கமாண்டன்ட் லெப். ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் பொறுப்பை ஒப்படைத்தார். டெஹ்ராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமி முன்னாள் மாணவரான மணீஷ்யெரி, 1988ல் காஷ்மீர் ராணுவ, 9வது காலாட்படைக்கு நியமிக்கப்பட்டார். வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரியின் முன்னாள் மாணவர். 37 ஆண்டு ராணுவத்தில் உள்ள இவர், கிழக்கு லடாக் சுஷுலில் பனிமலை பகுதிகளில் பட்டாலியன் பிரிவுக்கு கட்டளை அதிகாரியாக இருந்தார். தேசிய பாதுகாப்பு படை தலைமையகத்தில் இன்ஸ்பெக்டர் ஜெனரல், தென் மேற்கு பிரிவு தளபதி, பாதுகாப்பு அமைச்சக (ராணுவம்) தலைமையகத்தில் திட்ட இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.
ManiMurugan Murugan அருமை வாழ்த்திக்கள்