உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பந்தலுார் அருகே மனைவி கொலை; கணவன் கைது

பந்தலுார் அருகே மனைவி கொலை; கணவன் கைது

பந்தலுார்,; பந்தலுார் அருகே எருமாடு பழங்குடியின கிராமத்தில், குடிபோதையில் மனைவியை தாக்கி கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர். பந்தலுார் எருமாடு அருகே கரும்பங்கொல்லி பழங்குடியினர் கிராமத்தை சேர்ந்த மனோஜ்,37. இவர் மனைவி அம்பிகாவை மயக்கமான நிலையில்,நேற்று முன்தினம் காலை பந்தலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்.அப்போது, அம்பிகா, 36, ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. தகவலின் பேரில், இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டி தலைமையில் விசாரணை நடந்தது. பின்னர், பிரேத பரிசோதனை செய்து, உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். சாவில் மர்மம் இருப்பதாக அம்பிகாவின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.பின்னர், அவரின் உடல் மீண்டும் கொண்டு வரப்பட்டு, பந்தலுார் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டது. டி.எஸ்.பி., ஜெயபாலன் மனோஜிடம் விசாரித்தார். அதில், 'மனோஜ், அம்பிகா ஆகியோர் கடந்த, 9-ம் தேதி இரவு அருகிலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்று, உறவினர்களுடன் மது அருந்தி உள்ளனர். பின்னர், இவர்களின் வீட்டிற்கு நடந்து வந்தபோது, வழியில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, மனோஜ் கையில் வைத்திருந்த தடியால், மனைவி அம்பிகாவின் காலில் அடித்துள்ளார். ஏற்கனவே போதையில் இருந்த அம்பிகா நிலை தருமாறி, கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வந்துள்ளது. உடனடி சிகிச்சை அளிக்காத நிலையில் உயிரிழந்தார்,' என, தெரியவந்தது. தொடர்ந்து, மனோஜ் கைது செய்யப்பட்டார். உறவினர்களிடம் அம்பிகாவின் உடல் ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை