உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பஜாரில் காட்டெருமை உலா; அச்சத்தில் உள்ளூர் மக்கள்

பஜாரில் காட்டெருமை உலா; அச்சத்தில் உள்ளூர் மக்கள்

ஊட்டி; 'நுந்தளா பஜாரில் உலா வரும் காட்டெருமையை வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும்,' என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஊட்டி- மஞ்சூர் பிரதான சாலையில் நுந்தளா மட்டத்தில் கூட்டுறவு வங்கி, கடைகள், குடியிருப்புகள் அதிக அளவில் உள்ளன. பிரதான சாலை என்பதால் ஏராளமான வாகனங்கள் இவ்வழியாக சென்று வருகிறது. பஜார் பகுதியில் காட்டெருமை ஒன்று எந்நேரமும் சுற்றி திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. அத்தியாவசிய தேவைக்கு வரும் பொதுமக்கள், பஸ்சிற்காக காத்திருக்கும் பயணியர் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.வனத்துறையினர் அங்கு ஆய்வு மேற்கொண்டு காட்டெருமையை வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி