மேலும் செய்திகள்
தவிப்பு
09-Nov-2024
கூடலுார்; கூடலுார் குணில் பகுதியில் நுழைந்த காட்டு யானை வீட்டின் கேட், சுற்றுச்சுவரை சேதப்படுத்தியது.கூடலுார், தொரப்பள்ளி அருகே உள்ள குணில் பகுதியில், விவசாயிகள் அதிகளவில் நெல் விவசாயம் செய்துள்ளனர். அடுத்த மாதம் நெல் அறுவடை பணிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில், காட்டு யானைகள் இரவில் வயல்களில் நுழைந்து நெற்பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனை தடுக்க நடவடிக்கை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை, 3:15 மணிக்கு, குணில் பகுதியில் நுழைந்த காட்டு யானை, ஒரு வீட்டின் சுற்றுச்சுவரை உடைத்து வயலுக்குள் நுழைய முயன்றது. உயரமான தடுப்பு சுவரில் இறங்க முடியாததால், வீட்டின் கேட்டை உடைத்து வெளியேறியது. தொடர்ந்து, வயலில் நுழைந்து நெற்பயிரை சேதப்படுத்தி சென்றது. தொடரும் காட்டு யானைகள் பிரச்னைகளால் மக்கள் அச்சத்துள்ளனர்.மக்கள் கூறுகையில்,'இரவில் இப்பகுதியில் நுழையும் காட்டு யானை நெற்பயிர்களை, தொடர்ந்து வீட்டின் சுவர்களை சேதப்படுத்தி இருப்பது, அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, வனத்துறையினர் முன்னெச்சரிக்கையாக யானைகள் இப்பகுதிக்குள் நுழைவதை தடுக்க வேண்டும்,' என்றனர்.
09-Nov-2024