மேலும் செய்திகள்
பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப் :உயிர் தப்பிய இருவர்
14-Mar-2025
கூடலுார்; கூடலுார் அருகே, ரேஷன் கடையை காட்டு யானை சேதப்படுத்திய போது, கடைக்கு அருகே உறங்கி கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் இருவர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்முதுமலை புலிகள் காப்பகம் வழியாக செல்லும், மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், வனவிலங்குகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இரவு, 9:00 மணி முதல் காலை 6:00 மணி வரை வாகன போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளனர். ஊட்டி, கேரளாவில் இருந்து கர்நாடகாவுக்கு இரவில் செல்லும் வாகனங்கள் முதுமலை நுழைவு வாயில் பகுதியான, கூடலுார் தொரப்பள்ளியில் நிறுத்தி இரவு காத்திருந்து, காலையில் பயணத்தை தொடர்கின்றன.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தொரப்பள்ளிக்கு வந்த இரண்டு சுற்றுலா பயணிகள், வாகனத்தை நிறுத்திவிட்டு ரேஷன் கடை அருகே கடையோரம் உறங்கினர். நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு, அங்கு வந்த காட்டு யானை கடையை சேதப்படுத்தி, மூட்டைகளை வெளியே இழுத்து அரிசியை உட்கொள்ள துவங்கியது. இதனை அறியாத சுற்றுலா பயணிகள் இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.இதனை பார்த்த சிலர் சப்தம் எழுப்பினர். இருவரும் திடீரென எழுந்து காட்டு யானையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அருகில் இருந்த நபர் இருவரையும் இழுத்து சென்று காப்பாற்றினார். இவை அருகில் கடையில் இருந்த'சிசிடிவி' கேமராவில் பதிவாகின. இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.மக்கள் கூறுகையில், 'இப்பகுதியில் இரவில் முகாமிடும் காட்டு யானை, இரண்டு முறை ரேஷன் கடையை சேதப்படுத்தி உள்ளது. இன்று (நேற்று), அதிகாலை, சம்பவம் நடந்த போது, அருகே உறங்கி கொண்டிருந்த இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். எனவே, நாள்தோறும் வரும் காட்டு யானையை அடர்ந்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்,' என்றனர்.
14-Mar-2025