உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலையில் இறந்து கிடந்த காட்டு யானை

சாலையில் இறந்து கிடந்த காட்டு யானை

கூடலுார்; மசினகுடி போலீசார் தெப்பக்காடு- மசினகுடி சாலையில் கண்காணிப்பு பணிக்காக வாகனத்தில் சென்ற போது, சாலையில் நடுவே காட்டு யானை இறந்து கிடந்தது தெரியவந்தது. வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். மசினகுடி வனச்சரகர் ராஜன், வானவர் சந்திரன் ராஜ், வன ஊழியர்கள் உடலை ஆய்வு செய்தனர். அப்போது, அவ்வழியாக பயணித்த வாகனங்கள் நிறுத்தப்பட்டன. தொடர்ந்து, பொக்லைன் உதவியுடன் இறந்த யானையின் உடல் சாலையோரம் இழுத்து செல்லப்பட்டது. அதன் பின் வாகன போக்குவரத்து சீரானது. இதை தொடர்ந்து, இறந்த காட்டு யானையின் உடலை, மசினகுடி துணை இயக்குனர் அருண்குமார் மற்றும் வன அதிகாரிகள் ஆய்வு செய்தனர். முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தார். வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த யானைக்கு, 50வயது இருக்கும். வயது முதிர்வு, உள் உறுப்பு பாதிப்பு காரணமாக இறந்துள்ளது. ஆய்வக சோதனைக்காக மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன் முடிவு கிடைத்த பின்பு, யானை இறப்புக்கு வேறு காரணம் இருப்பின் தெரியவரும்,' என்றனர். சமீப காலமாக இந்த யானை, மசினகுடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் கடை, வீடுகளை சேதப்படுத்த வந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி