மேலும் செய்திகள்
ஆத்துாரில் யானைகள் நடமாட்டம்
23-Dec-2024
கோத்தகிரி; 'கோத்தகிரி குஞ்சப்பனை பகுதியில், யானைகள் நடமாடுவதால் டிரைவர்கள் பாதுகாப்புடன் சென்று வர வேண்டும்,' என, அறிவுறுத்தப் பட்டுள்ளது. கோத்தகிரி -மேட்டுப்பாளையம் சாலையில், சமீப காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வனப்பகுதியில் தண்ணீர் மற்றும் உணவு தட்டுப்பாடு காரணமாக யானைகள் தாழ்வான பகுதியில் இருந்து, சாலையில் நடமாடுவது தொடர்கிறது.இதனை உறுதிப்படுத்தும் விதமாக, இரு நாட்களுக்கு முன்பு, இரவு குஞ்சப்பனை மாமரம் இடையே, நீண்ட நேரம் ஒற்றை யானை சாலையில் நடமாடியுள்ளது. இதனால், யானையை கடந்து செல்ல முடியாமல், இருபுறமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவசரமாக யானையை கடக்க சென்ற ஒரு காரின் கண்ணாடியை யானை உடைத்தது. டிரைவர் அலறி அடித்து ஓட்டம் பிடித்தார்.யானை தேயிலை தோட்டம் வழியாக, வனப்பகுதிக்குள் இறங்கியதை அடுத்து, நிம்மதி அடைந்து டிரைவர்கள் வாகனங்களை இயக்கி சென்றனர்.வனத்துறையினர் கூறுகையில், 'இப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் தொடர்வதால், டிரைவர்கள் முகப்பு விளக்கை ஒளிரவிடாமல், ஹாரன் அடிக்காமல், யானைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் பாதுகாப்புடன் சென்று வர வேண்டும்,'என்றனர்.
23-Dec-2024