உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நகரில் உலா வரும் காட்டு பன்றிகள்; வாகன விபத்து ஏற்படும் அபாயம்

நகரில் உலா வரும் காட்டு பன்றிகள்; வாகன விபத்து ஏற்படும் அபாயம்

கூடலுார்; கூடலுார் நகர பகுதியில், பகல் நேரத்தில் காட்டு பன்றிகள் உலா வருவதும் சாலையை கடந்து செல்வதும் அதிகரித்துள்ளது. இதனால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். வாகன விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.பொதுமக்கள் கூறுகையில், 'கூடலுார் கோழிக்கோடு சாலை துப்புகுட்டி பேட்டை, செம்பாலா பகுதிகளில் இரவு நேரங்களில் காட்டு பன்றிகள் அடிக்கடி சாலையை கடந்து செல்கின்றன. சமீப காலமாக நகரப் பகுதியில் பகல் நேரத்தில் காட்டு பன்றிகள் சாலையை கடந்து செல்வதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, காட்டு பன்றிகள் நகருக்குள் வருவதை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ