உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மின் கம்பத்தின் மீது ஸ்கூட்டர் மோதி விபத்து: பெண் பலி

மின் கம்பத்தின் மீது ஸ்கூட்டர் மோதி விபத்து: பெண் பலி

கூடலுார், ; கூடலுார், தர்மகிரி அருகே கட்டுப்பாடு இழந்த ஸ்கூட்டர் மின் கம்பத்தில் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தார்.கூடலுார், ஓவேலி தருமகிரி பகுதியை சேர்ந்தவர் ஐஸ்னா, 32. இவர், ஸ்கூட்டர் பழகி வந்தார். நேற்று முன்தினம், மாலை, தர்மகிரி பகுதியில் தனியாக ஸ்கூட்டர் இயக்கி உள்ளார். திடீரென ஸ்கூட்டர் கட்டுப்பாட்டு இழந்து, சாலையோரம் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக, தனியார் மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தனர். தொடர்ந்து, அவர் உடல் பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்து குறித்து நியூஹோப் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி