உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குன்னுார் பஸ் ஸ்டாண்டில் பாதியில் நின்ற பணிகள்

குன்னுார் பஸ் ஸ்டாண்டில் பாதியில் நின்ற பணிகள்

குன்னுார்; குன்னுார் பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் ஆற்றோர பகுதியில் தடுப்புகளுடன் இருக்கை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.குன்னுார் பஸ் ஸ்டாண்ட்டில் நகராட்சி சார்பில், 1.19 கோடி ரூபாய் மதிப்பில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. அதில், பஸ் ஸ்டாண்டில் உள்ள விடுதி அறைகள் சீரமைப்பு பணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, பயணிகள் அமரும் இடங்கள் பொலிவுபடுத்தப்படாமல் உள்ளன. இந்நிலையில், பஸ் ஸ்டாண்டின் எதிர்புறம், மழையில் இடிந்த ஆற்றோர இடத்தில், நகராட்சி சார்பில் தடுப்பு அமைத்து, இரும்பு கம்பிகளால் இருக்கை அமைக்கும் பணி நடந்தது. ஆனால், இந்த பணி முழுமையாக மேற்கொள்ளாமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பயணிகளுக்கு பயன் இல்லாத நிலை உள்ளது. எனவே, இப்பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து, பணிகளை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை