உள்ளூர் செய்திகள்

 தொழிலாளி காயம்

ஊட்டி : ஊட்டி அடுத்த கேத்தி பாலாடா பகுதியில் நேபாள நாட்டைச் சேர்ந்த கணேஷ் சமாய், 53, என்பவர் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த வழியாக காட்டெருமை வந்தது. மிக அருகில் காட்டெருமை வந்துவிட்டதால் இவரால் தப்பி ஓட முடியவில்லை. ஒரு கட்டத்தில் இவரை விரட்டிய காட்டெருமை முட்டி தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ