உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  புலி தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

 புலி தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

கூடலுார்: கூடலுார் அருகே, புலி தாக்கியதில் பாலகிருஷ்ணன், 60, உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம், கூடலுார் ஓவேலி லாரஸ்டன் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். நேற்று முன்தினம், தனியார் காபி தோட்டத்தில் குடிநீர் குழாயை சீரமைக்க சென்றவர், வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தார், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். நேற்று காலை வனத்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டபோது, காபி தோட்டத்தில் கடித்து குதறப்பட்ட நிலையில், பாலகிருஷ்ணன் சடலம் கிடந்தது. புலியின் கால்தடமும் பதிவாகியிருந்தது. இதையடுத்து, புலியை பிடிக்க வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். கூடலுார் ஆர்.டி.ஓ., குணசேகரன், டி.எஸ்.பி., கோபாலகிருஷ்ணன் ஆகியோர், பேச்சு நடத்தி, அவர்களை கலைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை