உலக யானைகள் தினம் அனுசரிப்பு
கோத்தகிரி: கோத்தகிரி சமுதாய கல்லுாரியில், உலக யானைகள் தினம் அனுசரிக்கப்பட்டது. கோத்தகிரி வனச்சர் ரவீந்திரன் அறிவுறுத்தல் படி, வன துறையினர் பங்கேற்று. யானைகளின் வழித்தடத்தை பாதுகாப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர். வனக்காவலர் அசோக், வரைகலை ஆசிரியர் கண்ணன், வானவர் மணிகண்ட பிரபு, மாணவர்களுக்கு வனம், விலங்குகள் மற்றும் பறவைகள் பாதுகாப்பு குறித்து விளக்கினர். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கல்லுாரி வளாகம் மற்றும் பொது இடங்களில், மரக்கன்று நடவு செய்து வளர்ப்பது என உறுதிமொழி எடுத்தனர். கல்லுாரி ஒருங்கிணைப்பாளர் லெனின் நன்றி கூறினார்.