உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / உலக தபால் தினம்; மாணவர்களுக்கு போட்டி

உலக தபால் தினம்; மாணவர்களுக்கு போட்டி

பந்தலுார் : பந்தலுார் அருகே கரியசோலை அரசு உயர்நிலைப்பள்ளியில், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில், உலக தபால் தினம் கொண்டாடப்பட்டது.பள்ளி தலைமை ஆசிரியர் புளோரா குளோரி தலைமை வகித்தார். பட்டதாரிஆசிரியர் மார்கிரேட் மேரி முன்னிலை வகித்தார். நுகர்வோர் மன்ற நிர்வாகி மணிவாசகம் தபால்களின் முக்கியத்துவம் மற்றும் உலக தபால் தினம் கொண்டாடப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினார்.மாணவர்களுக்கு கடிதம் எழுதும் போட்டி நடத்தப்பட்டு, சிறந்த கடிதம் எழுதிய மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் நிரோஷா,மேகலா நிஷாத் மற்றும் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ