கடையில் புகுந்து தாக்குதல் :வாலிபர் கைது
ஊட்டி: ஊட்டி காபி ஹவுஸ் சந்திப்பில், உள்ள ஒரு மொபைல் போன் கடைக்கு, கடந்த, 2ம் தேதி வந்த வாலிபர் ஒருவர், ஏற்கனவே தான் வாங்கிய 'ஹெட்செட்' சரிவர வேலை செய்வதில்லை, மாற்றித் தர வேண்டும் என, கடையில் பணியில் இருந்த பெண்ணிடம் கேட்டுள்ளார். 'அந்த ஹெட்செட் பழுதாகி உள்ளதால், மாற்றித்தர முடியாது,' என, இளம் பெண் கூறியுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த வாலிபர், கடை ஊழியர்கள் அப்துல் ஹக்கீம், ரஞ்சித் குமார், இளம் பெண் ஆகியோரை, பீர் பாட்டியை உடைத்து தாக்கியுள்ளார். காயமடைந்த, மூவரும், அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டனர். இந்த புகாரின்படி, ஊட்டி மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், எஸ்.ஐ. கனகராஜ் தலைமையில், போலீசார் விசாரணை செய்தனர். அதில், தொடர்புடைய, ஊட்டி எமரால்டு பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்த, கேரள மாநிலம், மலப்புரத்தை சேர்ந்த ரிஷித், 32 என்பவரை நேற்று கைது செய்தனர்.