உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / போதை மாத்திரையுடன் வாலிபர் கைது

போதை மாத்திரையுடன் வாலிபர் கைது

பாலக்காடு, ; பாலக்காடு அருகே போதை மாத்திரையுடன் வாலிபரை கலால் துறையினர் கைது செய்தனர். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோவை -- -கொச்சி தேசிய நெடுஞ்சாலையில், வாளையாரில் இன்ஸ்பெக்டர் பிரேமானந்த்குமார் தலைமையிலான கலால் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கோவை பகுதியில் இருந்து எர்ணாகுளம் நோக்கி வந்த கேரள அரசு பஸ்சை நிறுத்தி பயணியரிடம் சோதனை நடத்தினர். அப்போது, திருச்சூர் மாவட்டம் சாவக்காடு மணத்தலை பகுதியைச் சேர்ந்த ஷமீர், 34, என்பவரின் பையில், 8 லட்சத்து, 45 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 211.4 கிராம் கொண்ட மெத்தாம்பெட்டாமின் என்ற போதை மாத்திரை மறைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து கைது செய்த அவரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ