உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சந்தன கட்டையுடன் வாலிபர் கைது

சந்தன கட்டையுடன் வாலிபர் கைது

பாலக்காடு; பாலக்காடு அருகே, 64 கிலோ சந்தன கட்டைகளுடன் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கேரளா மாநிலம், பாலக்காடு அருகே, இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீஸ் படையினர், நேற்று முன்தினம் இரவு பாலக்காடு - -கோழிக்கோடு தேசிய நெடுஞ்சாலை மண்ணார்க்காட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது, காரில் ரகசிய அறை அமைத்து, 64 கிலோ சந்தன கட்டைகள் மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், கார் ஓட்டுநர் குமரம்புத்தூர் பள்ளிக்குன்னு பகுதியைச் சேர்ந்த நிசார், 29, என்பதும், விற்பனைக்காக சந்தன கட்டைகள் கடத்திச் செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை