உள்ளூர் செய்திகள்

வாலிபர் கைது

ஊட்டி; ஊட்டியை சேர்ந்த ஒரு தம்பதியின் மகளும், அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த, 2023 ம் ஆண்டு சிறுமியும், வாலிபரும் மேட்டுப்பாளையத்தில் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் திருமணத்தை பதிவு செய்ய சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு, ஆதாரை பரிசோதித்த போது சிறுமிக்கு, 17 வயது என்பது தெரியவந்தது. இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகளுக்கும், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஊட்டி ரூரல் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, வாலிபரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி