மேலும் செய்திகள்
காங். கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்
22-Sep-2025
பந்தலுார்: பந்தலுாரில் இளைஞர் காங்., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் காங்., சட்டமன்ற தலைவர் சித்திக் வரவேற்றார். மாவட்ட தலைவர் மெல்வின் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் அபுதாஹிர், தேசிய ஒருங்கிணைப்பாளர் அஸ்பக் எடாலத், முன்னாள் மாவட்டத் தலைவர் நவ்ஷாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கேரள மாநில துணைத்தலைவர் பலராம், இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் சூரிய பிரகாஷ், தேசிய செயலாளர் ஜீன்சாத் ஜின்னாஸ் பங்கேற்று பேசினர். ஆர்ப்பாட்டத்தில்,' தேர்தலின் போது நடக்கும் ஓட்டு திருட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும்,'என வலியுறுத்தி பேசப்பட்டது. கூட்டத்தில், ஊட்டி எம்.எல்.ஏ. கணேஷ், கட்சி பொதுச் செயலாளர் கோஷிபேபி உட்பட பலர் பங்கேற்றனர். இளைஞர் காங்கிரஸ் வட்டார தலைவர் ரூபன் நன்றி கூறினார்.--
22-Sep-2025