உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பைக் விபத்தில் இளைஞர் படுகாயம்

பைக் விபத்தில் இளைஞர் படுகாயம்

ஊட்டி : ஊட்டியில் அதிவேக மாக பைக்கில் சென்ற இளைஞர் தடுப்பில் மோதி படுகாயமடைந்தார்.ஊட்டி எச்.பி.எப்., பாரதி நகரை சேர்ந்த நித்தின் என்பவர், நேற்று முன்தினம் பிங்கர் போஸ்ட் பகுதியில் பைக்கில் அதிவேகமாக சென்றுள்ளார். கட்டுப்பாட்டை இழந்து தடுப்பில் மோதி பைக்குடன் உருண்டுள்ளார். படுகாயம் அடைந்த அவரை சிலர், ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ