மேலும் செய்திகள்
பெரம்பலுாரில் போலி டாக்டர் சிக்கினார்
20-Sep-2025
குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
16-Sep-2025
8 மாத குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
15-Sep-2025
ஓசி மது கேட்டவரை கொலை செய்து உடலை எரிக்க முயற்சி
14-Sep-2025
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். பெரம்பலூர் அருகே பொம்மனப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் செல்லமுத்து மனைவி செல்லம்மாள் (65). இவருக்கு நீண்ட நாட்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்தது. இதற்கு பல டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் வலி சரியாகவில்லை. நேற்று முன்தினம் இரவு செல்லம்மாள் மற்றும் செல்லமுத்து ஆகிய இருவரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவு 12 மணியளவில் செல்லமாளுக்கு தாங்க முடியாத அளவுக்கு தலை வலி வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த செல்லம்மாள் வீட்டிலிருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். படுகாயமடைந்த செல்லமாளை, செல்லமுத்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியில் செல்லம்மாள் இறந்தார். பாடாலூர் எஸ்.எஸ்.ஐ., கணேசன் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.
20-Sep-2025
16-Sep-2025
15-Sep-2025
14-Sep-2025