மேலும் செய்திகள்
பெரம்பலுாரில் போலி டாக்டர் சிக்கினார்
20-Sep-2025
குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
16-Sep-2025
8 மாத குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
15-Sep-2025
பெரம்பலூர்: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் ராமுவசந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட தே.மு.தி.க., சார்பில், அவரது திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடந்தது.விழாவுக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் துரை காமராஜ் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் சீனி வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர்கள் கண்ணுசாமி, சுடர்செல்வன், கங்காதரன், சிவக்குமார், ஒன்றிய செயலாளர்கள் வாசு ரவி, செல்லப்பிள்ளை, கண்ணன், தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் ராமுவசந்தனின் திருஉருவ படத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் துரை காமராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அணி செயலாளர்கள் காமராஜ், மலர்மன்னன், சேதுபதி, விஸ்வா, சேகர், சீனிவாசன், ஜோதி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ரவிக்குமார், ரெங்கராஜ், பெரம்பலூர் நகர செயலாளர் மோனலிசா ஜெயக்குமார், பேரூர் செயலாளர் ரமேஷ், ஒன்றிய பொருளாளர் சதீஸ், துணை செயலாளர் சின்னசாமி, நிர்வாகிகள் கலைச்செல்வன், சுரேஷ், பெருமாள், ரவி, ரெங்கநாதன் உட்பட பலர் பங்கேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
20-Sep-2025
16-Sep-2025
15-Sep-2025