மேலும் செய்திகள்
பெரம்பலுாரில் போலி டாக்டர் சிக்கினார்
20-Sep-2025
குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
16-Sep-2025
8 மாத குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
15-Sep-2025
பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்டம், அரும்பாவூரை சேர்ந்த ராமசாமி நேற்று முன்தினம் இரவில், ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றார்.நேற்று காலை பட்டியில் ஆடுகள் கத்தும் சத்தம் தொடர்ந்து கேட்கவே, அங்கு சென்று பார்த்த போது 10 ஆடுகளை வெறிநாய்கள் கடித்து குதறி சென்றது தெரியவந்தது. இதில், 10 ஆடுகளும் பரிதாபமாக உயிரிழந்தன. ராமசாமி அரும்பாவூர்போலீசில் புகார் அளித்து உள்ளார்.இதுபோல வெறிநாய்கள் கடந்த வாரத்தில் அரும்பாவூர் கிராமத்தை சேர்ந்த, 10க்கு மேற்பட்ட நபர்களை கடித்து காயப்படுத்தின. அதேபோன்று, ஆறு ஆடுகளையும் கடித்து உள்ளன. தொடர்ச்சியாக, ஆடுகளையும் மனிதர்களையும் கடித்து வருவதால் வெறிநாய்களை உடனே பிடிக்க பாதிக்கப்பட்டவர்கள் அரும்பாவூர் பேரூராட்சி அலுவலகத்திலும், போலீஸ் ஸ்டேஷனிலும் புகார் தெரிவித்துள்ளனர். வெறிநாய்கள் கடித்து, 10 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அரும்பாவூரில் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
20-Sep-2025
16-Sep-2025
15-Sep-2025