மேலும் செய்திகள்
5,000 ரூபாய் லஞ்சம்;சர்வேயர், வி.ஏ.ஓ., கைது!
04-Feb-2025
பெரம்பலுார்: -பெரம்பலுாரில் வீட்டிற்கு வீட்டு வரி ரசீது வழங்க, 25,000 ரூபாய் லஞ்சம் பெற்ற நகராட்சி பில் கலெக்டர், புரோக்கரை போலீசார் கைது செய்தனர்.பெரம்பலுாரை சேர்ந்த வேல்முருகன் புதிதாக கட்டியுள்ள வீட்டிற்கு, சொத்து வரி செலுத்த நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தார். பெரம்பலுார் நகராட்சி பில் கலெக்டரான சிவக்குமார், 54, மேலப்புலியூரை சேர்ந்த ராம்குமார், 38, என்ற புரோக்கர் வாயிலாக 25,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.தர விரும்பாத நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்யப்பட்டது. ரசாயனம் தடவிய பணத்தை லஞ்சமாக, சிவகுமாரிடம் கொடுத்துள்ளனர். அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சிவகுமார், ராம்குமார் ஆகியோரை கையும், களவுமாக கைது செய்தனர்.
04-Feb-2025