மேலும் செய்திகள்
பெரம்பலுாரில் போலி டாக்டர் சிக்கினார்
20-Sep-2025
குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
16-Sep-2025
8 மாத குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
15-Sep-2025
ஓசி மது கேட்டவரை கொலை செய்து உடலை எரிக்க முயற்சி
14-Sep-2025
பெரம்பலுார்:பெரம்பலுார் கலெக்டர் கற்பகம் இடமாற்றம் செய்யப்பட்டதால், பெரம்பலுார் மாவட்ட மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.பெரம்பலுார் கலெக்டராக கற்பகம் கடந்த 2023ம் ஆண்டு பிப்., 5ம் தேதி பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அப்போது, முதல் ஏழைகள் நலனில் அக்கறை செலுத்தினார். முதியோர் உதவித்தொகை பெற்றுத்தருவது, அரசின் நலத்திட்டங்களை அமல்படுத்துவது ஆகியவற்றில் தீவிரமாக செயல்பட்டதுடன், பொதுமக்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தார்.சாமானிய மக்களும் அவரை எளிதில் சந்தித்து தங்களது பிரச்னைகளை தெரிவித்து தீர்வு கண்டனர்.நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், குளங்களை துார்வாருதல், வாய்க்கால்களை சீரமைப்பு பணிகளிலும் ஆர்வம் காட்டினார். செவ்வாய்க்கிழமை அவரை இடமாற்றம் செய்த தமிழக அரசு, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்தது.கற்பகம் ஓய்வு பெற இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில், அவரை இடமாற்றம் செய்தது பெரம்பலுார் மாவட்ட மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.தங்களது அதிருப்தியை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் அவர்கள், மாவட்ட மக்களுக்கு சிறப்பாக பணியாற்றி தமிழக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு மக்கள் கலெக்டராக இருந்தவரை பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதை திரும்பப் பெற்று இதே பணியிடத்தில் அவரை மீண்டும் நியமிக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கைவிடுக்கின்றனர்.
20-Sep-2025
16-Sep-2025
15-Sep-2025
14-Sep-2025