உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / போலி வாக்காளர் அட்டை ரூ.250க்கு தயாரித்தவர் கைது

போலி வாக்காளர் அட்டை ரூ.250க்கு தயாரித்தவர் கைது

பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டம், லப்பைக்குடிகாடு அபுபக்கர் தெருவைச் சேர்ந்தவர் முகமது சமீம், 33, இவர், லப்பைக்குடிகாடு மெயின் ரோட்டில், கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்தார். அதே கிராமத்தைச் சேர்ந்த முகமது சாஜித், 19, என்பவர், வாக்காளர் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்க இவரை அணுகினார். 250 ரூபாய் பெற்று, வாக்காளர் அடையாள அட்டையை வழங்கினார். அந்த அட்டையை ஆதாரமாக வைத்து, முகமது சாஜித் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தார். போலீஸ் விசாரணையில், அவரது வாக்காளர் அடையாள அட்டை போலியானது என தெரிந்தது. இதையடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முகமது சாஜித்துக்கு வழங்கியது போல பலருக்கு போலி வாக்காளர் அடையாள அட்டையை முகமது சமீம் வழங்கியது தெரிந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை