உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / வன விலங்குகளை வேட்டையாட முயன்ற மூவருக்கு அபராதம்

வன விலங்குகளை வேட்டையாட முயன்ற மூவருக்கு அபராதம்

பெரம்பலுார்:பெரம்பலுார் வனச்சரகம் அம்மாபாளையம் பிரிவுக்கு உட்பட்ட குரும்பலுார் ஏரிக்கரை அருகே அஜித் குமார் தலைமையில் வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் திரிந்தவரை, போலீசில் ஒப்படைத்தனர். பெரம்பலுார் போலீசார் விசாரித்தனர். அவர் தம்பிரான்பட்டி கிராமம் கிழக்கு தெருவைச் சேர்ந்த கமலக்கண்ணன், 37, என்பதும், உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியை பயன்படுத்தி வன விலங்குகளை வேட்டையாடி வந்ததும் தெரிந்தது. கமலக்கண்ணனை போலீசார் கைது செய்து, நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.இதேபோல, பாளையம் கிராமத்தில் வனச்சரக அலுவலர் பழனிகுமார் தலைமையில் வனத்துறையினர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, வனவிலங்குகளை வேட்டையாட முயன்றதாக, அதே கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன், 27, ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்த அஜித்குமார், 19, திண்ணனுாரை சேர்ந்த சத்தியமூர்த்தி, 30, ஆகியோரை பிடித்து தலா 50,000 வீதம் மொத்தம் 1.50 லட்சம் ரூபாய் அபராதம் வசூலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை