காமுக வாலிபருக்கு 30 ஆண்டு சிறை
பெரம்பலுார்:திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் கிருஷ்ணன் கோவில் தெரு, கீழவாசல் பகுதியைச் சேர்ந்த வாவாசி மகன் பிரதீப், 19. இவர், 2021 ஜூலை 23ல் பெரம்பலுார் மாவட்டம், புதுக்குறிச்சி கிராமத்தில் உள்ள தன் பாட்டி வீட்டில் தங்கியிருந்தபோது, பெரம்பலுார் மாவட்டத்தை சேர்ந்த 4 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தார்.இதுகுறித்து, சிறுமியின் தாய், பெரம்பலுார் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரின்படி, போக்சோ சட்டத்தின் கீழ் பிரதீப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர்.பெரம்பலுார் மகிளா நீதிமன்ற நீதிபதி இந்திராணி, வழக்கை விசாரித்து, குற்றவாளி பிரதீப்புக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். பிரதீப்பை, போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அரசு தரப்பில் அரசு குற்றவியல் வக்கீல் சுந்தரராஜன் ஆஜரானார்.