உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / "வாழ்ந்து காட்டுவோம் சங்க செயற்குழு கூட்டம்

"வாழ்ந்து காட்டுவோம் சங்க செயற்குழு கூட்டம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாழ்ந்து காட்டுவோம் சங்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தரேஸ்அஹமது தலைமை வகித்தார். மாவட்ட திட்ட மேலாளர் சுபா முன்னிலை வகித்தார். இதில் நடப்பாண்டு திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, மாவட்ட திட்ட அலுவலகம் அமைத்தல், திட்ட ஒருங்கிணைப்பு அணிகளுக்கு அலுவலகம் அமைத்தல், மாவட்ட அலுவலகம் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பு அணி அலுவலகத்திற்கு தேவையான தளவாடப்பொருட்கள் கொள்முதல் செய்தல், களப்பணிக்கு தேவையான ஒப்பந்த ஊர்திகள் மற்றும் பணியாளர்கள் நியமனம் செய்தல், வட்டார அளவில் திட்டத்தை பற்றி விளக்கக்கூட்டம் நடத்துதல் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. கூட்டத்தில் மகளிர் திட்ட அலுவலர் தெய்வநாயகி, முன்னோடி வங்கி மேலாளர் ஜோதி, பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் கவிமணி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி