உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / ஆசிரியை கொடூரமாக அடித்து கொலை உடலை எரித்த சக ஆசிரியர் கைது

ஆசிரியை கொடூரமாக அடித்து கொலை உடலை எரித்த சக ஆசிரியர் கைது

பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்டம், வி.களத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் வெங்கடேசன், 44, தீபா, 42, ஆகிய இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. கடந்தாண்டு நவ., 15ம் தேதி, இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். பெரம்பலுார், வி.களத்துார் போலீசார் இருவரையும் தேடினர். இந்நிலையில், கடந்தாண்டு நவ., 30ம் தேதி, கோயம்புத்துார் உக்கடம் அருகே, தீபாவின் 'ரெனால்ட் க்விட்' காரை, வி.களத்துார் போலீசார் கண்டறிந்து சோதனையிட்டதில், காரில் ரத்தக்கறையுடன் சுத்தியல், கத்தி, தீபாவின் கொலுசு, ஏ.டி.எம்., கார்டு, வெங்கடேசனின் இரண்டு மொபைல் போன்களை கண்டெடுத்தனர்.வெங்கடேசனின் மொபைல் போனுக்கு கடைசியாக தொடர்பு கொண்ட, கோவை மதுக்கரையைச் சேர்ந்த பாலியல் புரோக்கர் மோகன் என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை விசாரித்து வரும் தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் சென்னையில் பதுங்கியிருந்த வெங்கடேசனை கைது செய்து, நேற்று பெரம்பலுார் அழைத்து வந்தனர்.அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கூறியதாவது:தீபாவிடம் வெங்கடேசன் கடனாக நிறைய பணம் பெற்றிருந்தார். பணத்தை தீபா திருப்பிக் கேட்டு பல முறை வெங்கடேசனை வற்புறுத்தி வந்தார்.மேலும், வெங்கடேசனுக்கு மேலும் சில பெண்களுடன் இருந்த தொடர்பை கைவிடுமாறு, தீபா வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால், அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்த ஆசிரியர் வெங்கடேசன், நவ., 15ம் தேதி, தஞ்சாவூர் மாவட்டம், முருக்கன்குடி வனப்பகுதிக்கு தீபாவை அவரது காரில் அழைத்துச் சென்றார்.காரில் வைத்து அவரை அடித்து கொலை செய்து, புதுக்கோட்டை வனப்பகுதியில் எரித்து விட்டார். அந்த காருடன் கோவை திரும்பிய போது, அங்கு விட்டு சென்றார்.இவ்வாறு போலீசில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.ஆசிரியராக இருந்து கொண்டு, பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததுடன், பழகிய மற்றொரு ஆசிரியையை கொடூரமாக கொன்ற அவர், இதுபோல ஏற்கனவே கொலைகள் செய்துள்ளாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.படுகொலை செய்யப்பட்ட ஆசிரியைக்கு இன்ஜினியர் கணவரும், ஆண், பெண் குழந்தைகளும் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி