உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / ஏணிப்படி இல்லாத நீர்த்தேக்க தொட்டி ஒன்றரை ஆண்டுகளாக நோ கிளீனிங்

ஏணிப்படி இல்லாத நீர்த்தேக்க தொட்டி ஒன்றரை ஆண்டுகளாக நோ கிளீனிங்

பெரம்பலுார்: பெரம்பலுார் அருகே, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி யில் ஏணிப்படி இல்லாததால், ஒன்றரை ஆண்டுகளாக சுத்தம் செய்யாமல் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கும் அவலம் நடக்கிறது. பெரம்பலுார் மாவட்டம், சத்திரமனை கிராமம், மாரியம்மன் கோவில் அருகே உள்ள பாரதியார் தெரு மங்கூன் ரோடு பகுதி யில் தமிழக முதல் வராக காமராஜர் இருந்த காலத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்த தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு, நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, சத்திரமனை ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகம் செய்து வருகிறது. தொட்டியை சுத்தம் செய் வதற்காகவும், தண்ணீரின் கொள்ளளவை பார்ப்பதற்காகவும் ஏணிப்படி கட்டப்பட்டிருந்தது. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஏணிப்படி இடிந்து விழுந்தது. பின்னர், ஏணிப்படி கட்டப்படவில்லை. இருப்பினும், இதுநாள் வரை இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதி மக்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஏணிப்படி கட்ட, தொடர்ந்து கோரிக்கை வைத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 15 நாட்களுக்கு ஒரு முறை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை கழுவி, சுத்தம் செய்த பின்னரே பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்பது விதிமுறை. இதை பெரம்பலுார் கலெக்டர் மிருணாளி கடைப்பிடிக்க உத்தரவிட்டும், சத்திரமனை ஊராட்சி நிர்வாகம் இதை பின்பற்றவில்லை. ஒன்றரை ஆண்டுகளாக சுத்தம் செய்யாமல் தண்ணீர் வினியோகம் செய்வதால் பொதுமக்கள் சிலர் வயிற்றுப்போக்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை