உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / கவர்னருக்கு கறுப்புக் கொடி வி.சி., கட்சியினர் கைது

கவர்னருக்கு கறுப்புக் கொடி வி.சி., கட்சியினர் கைது

பெரம்பலுார்:மயிலாடுதுறை மாவட்டம் கம்பர்மேடு பகுதியில் 'அயோத்தி ராமரும் தமிழ் கம்பனும்' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழக கவர்னர் ரவி நேற்று காலை திருச்சி விமான நிலையத்தில் இருந்து அரியலுார் மாவட்டம் அணைக்கரை பாலம் வழியாக காரில் சென்றார். அப்போது அரியலுார் மாவட்டம் ஜெயங்கொண்டம் குறுக்கு சாலை வழியாக சென்ற அவருக்கு வி.சி. கட்சியின் அரியலுார் கிழக்கு மாவட்ட செயலர் கதிர் வளவன் தலைமையில் கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க முயன்றனர். அப்போது நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கையெழுத்து போடாமலும் திருவள்ளுவர் சிலைக்கு காவி போர்வை போர்த்தி ஆர்.எஸ்.எஸ். போல் செயல்படும் கவர்னரை கண்டித்து கோஷங்கள் எழுப்பிய 25 பேரை ஜெயங்கொண்டம் போலீசார் கைது செய்தனர்.இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ