மேலும் செய்திகள்
பெரம்பலுாரில் போலி டாக்டர் சிக்கினார்
20-Sep-2025
குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
16-Sep-2025
8 மாத குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
15-Sep-2025
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே குன்னம் பகுதியை சேர்ந்தவர் முத்துச்செல்வி (19). ராஜ்குமாருக்கும், முத்துச்செல்விக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. ராஜ்குமார் உடல் ஊனமுற்றவர் என்பதால் திருமணமான நாளிலிருந்து கணவன், மனைவி இடையே கருத்துவேறுபாடு இருந்து வந்துள்ளது. நேற்று மதியம் 1.30 மணியளவில் முத்துச்செல்வி வீட்டில் உள்ள ஃபேனில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். முத்துச்செல்வி அப்பா ராமசாமி கொடுத்த புகாரின்பேரில் குன்னம் இன்ஸ்பெக்டர் சுப்பையா விசாரிக்கிறார். 'திருமணமான இரண்டு மாதத்தில் முத்துச்செல்வி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்' என்ற சந்தேகத்தின்பேரில், பெரம்பலூர் ஆர்.டி.ஓ., ரேவதி விசாரிக்கிறார்.
20-Sep-2025
16-Sep-2025
15-Sep-2025