மேலும் செய்திகள்
பெரம்பலுாரில் போலி டாக்டர் சிக்கினார்
20-Sep-2025
குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
16-Sep-2025
8 மாத குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
15-Sep-2025
ஓசி மது கேட்டவரை கொலை செய்து உடலை எரிக்க முயற்சி
14-Sep-2025
பெரம்பலூர்: முன்னாள் பிரதம் ராஜீவ்காந்தியின் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு எரிசக்தி முன்னேற்ற கழகம், ரோட்டரி கிளப் ஆகியவை இணைந்து மரபுசாரா மற்றும் மாற்று எரிசக்தி பற்றிய விழிப்புணர்வு பேரணி பெரம்பலூரில் நடந்தது. பேரணியை மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) சுப்ரமணியன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் ரோட்டரி கிளப் தலைவர் பாரத் வெங்கடேசன், ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் செயலாளர் விவேகானந்தன், ரோட்டரி செயலாளர் பிரகாஷ், பொருளாளர் அம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சங்குபேட்டை பகுதியில் துவங்கிய பேரணி பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டில் முடிவடைந்தது. இதில் ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர்கள் நடராஜன், தனராஜ், சுந்தரம், வக்கீல் பாபு, பாரத் ஜெயராமன், விஜயபாஸ்கர் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ரவி செய்திருந்தார்.
20-Sep-2025
16-Sep-2025
15-Sep-2025
14-Sep-2025