உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்க மாற்றுத்திறனாளி மாணவி மனு

தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்க மாற்றுத்திறனாளி மாணவி மனு

பெரம்பலூர்: ப்ளஸ் 2 அரசு பொதுத்தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்க உத்தரவிடக்கோரி மாற்றுத்திறனாளி மாணவி பிரியா நேற்று பெரம்பலூர் கலெக்டர் தரேஷ்அஹமதுவிடம் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது: பெரம்பலூர் மாவட்டம் மாவிலங்கை கிராமத்தை சேர்ந்த பாண்டியன் மகள் பிரியா (17). நான் செட்டிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்போது ப்ளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் படித்து வருகிறேன். நான் எஸ்.எஸ்.எல்.சி.,யில் 437 மதிப்பெண் பெற்றேன். ப்ளஸ் 2 அரசு பொதுத்தேர்விலும் அதிக மதிப்பெண் பெற்று இன்ஜினியராக வேண்டும் என விரும்புகிறேன். நான் மாற்றுத்திறனாளி என்பதால் ப்ளஸ் 2 அரசு பொதுத்தேர்வின் போது மற்ற மாணவர்களுக்கு வழங்கும் மூன்று மணி நேரத்தில் என்னால் தேர்வு எழுத முடியாது. எனவே, எனக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும். நான் கல்வி பயில மாவட்ட நிர்வாகம் மூலம் உதவித்தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். மனுவை பெற்ற கலெக்டர் தரேஷ்அஹமது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ