உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / தி.மு.க., நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கவர்னர் படத்துக்கு செருப்பு மாலை

தி.மு.க., நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கவர்னர் படத்துக்கு செருப்பு மாலை

பெரம்பலுார் : தமிழக சட்டசபை கூட்டத்தில், கவர்னர் ரவி நடந்து கொண்ட விதத்தை கண்டித்து, பெரம்பலுார் மாவட்ட தி.மு.க., சார்பில், புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் முடிவில், கவர்னர் ரவியின் போட்டோவுடன் கூடிய டிஜிட்டல் பேனருக்கு செருப்பு மாலை அணிவித்ததுடன், செருப்பால் அடித்தனர்.அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தி.மு.க.,வினரிடம் இருந்து செருப்பு மாலையை பிடுங்கினர். இதனால், தி.மு.க.,வினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.செருப்பால் அடித்ததை தடுத்த போலீசார் சிலருக்கும், அப்போது செருப்படி விழுந்தது. இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

ரம்மி ரவி என விமர்சனம்

இதற்கிடையில், 'ரம்மி ரவி' என கவர்னரை தரக்குறைவாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட, தி.மு.க., நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ஜ.,வினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அப்துல்லா, தன்னுடைய முகநுால் பக்கத்தில், கவர்னருக்கு எதிராக தி.மு.க., சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்து பதிவிட்டிருந்தார். அதில் கவர்னரை, 'ரம்மி கவர்னர் ரவி' என்று குறிப்பிட்டுள்ளார். இதையறிந்த பா.ஜ.,வினர் கொந்தளித்தனர். பின், புதுக்கோட்டை பா.ஜ., வடக்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் அறிவுறுத்துதலின்படி, நகர தலைவர் சரவணகுமார் தலைமையில் பா.ஜ.,வினர் புறப்பட்டு திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்துக்குச் சென்றனர்.அங்கு, கவர்னரை இழிவுபடுத்தும்விதமாக பதிவிட்ட, தி.மு.க., மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அப்துல்லா மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ