உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பழுது: ரூ.1 லட்சம் இழப்பீடு

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பழுது: ரூ.1 லட்சம் இழப்பீடு

பெரம்பலுார்:அரியலுார் மாவட்டம், கரைவெட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 50. இவர், 2023ல் அரியலுார் வாலாஜா நகரிலுள்ள, பன்னீர் மோட்டார்ஸ் என்ற நிறுவனத்தில், 70,000 ரூபாய்க்கு, 'ரிமார்க்' என்ற நிறுவனத்தின் மின்சார இருசக்கர வாகனத்தை வாங்கினார். இரண்டு மாதத்தில் அதன், 'பேட்டரி' பழுதானதால், ராஜேந்திரன் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் முறையிட்டார். அந்த நிறுவனம் தங்களால் ஒன்றும் செய்ய இயலாது என தெரிவித்தது. நவம்பரில் அரியலுார் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ராஜேந்திரன் வழக்கு தொடுத்தார். ஆணைய தலைவர் தமிழ்ச்செல்வி, உறுப்பினர்கள் பாலு, லாவண்யா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. பன்னீர் மோட்டார்ஸ் நிறுவனம், ராஜேந்திரனுக்கு ஒரு மாத காலத்துக்குள் வாகனத்தை திரும்பப் பெற்று, வாகனத்தின் மதிப்பு, 70,000 ரூபாய், அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக 20,000 ரூபாயும், வழக்கு செலவுக்காக, 10,000 ரூபாயும் வழங்க வேண்டும் என, உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை