நோயாளி பெண்ணிடம் அத்துமீறல் மருத்துவமனை பணியாளருக்கு காப்பு
பெரம்பலுார்: உள்நோயாளியாக சிகிச்சை பெற்ற பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மருத்துவமனை பணியாளரை பெரம்பலுார் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அரியலுார் ராஜீவ்நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பெரியார் செல்வம், 43. இவர், பெரம்பலுார் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் வேலை செய்கிறார். இவர், கடந்த 28ம் தேதி மருத்துவமனையின் பெண்கள் வார்டுக்கு சென்றார். அங்கு உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த 20 வயது பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அலறிய அந்த பெண், தனக்கு நடந்தது குறித்து தன் தாயிடம் கூறினார். ஆத்திரமடைந்த தாய், பெரியார் செல்வத்தை தேடிய போது, மருத்துவமனையிலிருந்து ஓடி விட்டார். இதுகுறித்து, இளம்பெண் கொடுத்த புகாரின் படி, பெரம்பலுார் அனைத்து மகளிர் போலீசார், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மருத்துவமனை பணியாளர் பெரியார்செல்வத்தை கைது செய்து, பெரம்பலுார் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பெரியார்செல்வம் மீது ஏற்கனவே ஒரு போக்சோ வழக்கு நிலுவையில் உள்ளது.