உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / தரமற்ற மருந்து விற்ற வழக்கு 15 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு

தரமற்ற மருந்து விற்ற வழக்கு 15 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு

பெரம்பலுார்:பெரம்பலுாரில் தரமற்ற மருந்து விற்ற மருந்து நிறுவன உரிமையாளருக்கு, ஓராண்டு சிறை தண்டனை, 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப் பட்டது.பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள மருந்து கடைகளிலும், மருந்து விநியோக கடைகளிலும், 2010 டிச., 10ம் தேதி ஆய்வாளர்கள் சோதனை நடத்தினர். இதில், புதுச்சேரி மாநிலம், எம்பளம் தவளக்குப்பம், 'கேப்டா லைப் சயின்ஸ்' என்ற நிறுவனத்தின் சார்பில், பெரம்பலுார் மாவட்ட மருந்து கடைகள் மற்றும் விநியோகஸ்தர்களிடம் வழங்கப்பட்ட மாத்திரைகள், தரமற்று இருந்தது தெரியவந்தது. ஆய்வாளர்கள், அந்நிறுவன உரிமையாளர் ரோஸ்ராஜீவ்சிங், 50, என்பவர் மீது, பெரம்பலுார் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். விசாரித்த நீதிபதி பல்கீஸ், நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார். அதில், ரோஸ்ராஜீவ்சிங்கிற்கு ஓராண்டு சிறை தண்டனை, 20,000 ரூபாய் அபராதம் விதித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ