உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / குப்பையில் கிடந்த ஒரு சவரன் செயின் ஒப்படைத்த பணியாளருக்கு பாராட்டு

குப்பையில் கிடந்த ஒரு சவரன் செயின் ஒப்படைத்த பணியாளருக்கு பாராட்டு

பெரம்பலுார் : பெரம்பலுார், இந்திரா நகரை சேர்ந்தவர் செந்தில் மனைவி சுகந்தி, 46, கணவனை இழந்த இவர், பெரம்பலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தள்ளுவண்டியில் பிரியாணி கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவர், நேற்று காலை 8 மணியளவில், பெரம்பலுார் நகராட்சியின் குப்பை சேகரிக்கும் வாகன துாய்மை பணியாளர்களிடம் கடையில் சேர்ந்த குப்பையை கொட்டினார். அப்போது, குப்பையோடு சேர்த்து தவறுதலாக தன் ஒரு சவரன் செயினையும் சேர்த்து கொட்டியுள்ளார்.சிறிது நேரத்தில் பெரம்பலுார் நகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு, சுகந்தி இத்தகவலை தெரிவித்தார். இதற்கிடையில், குப்பையில் கிடந்த ஒரு சவரன் செயினை துாய்மை பணியாளர்களான தர்மலிங்கம், 50, மாரிமுத்து, 51, ஜெகநாதன், 50, ஆகிய மூவரும் பெரம்பலுார் போலீசில் ஒப்படைத்தனர். பெரம்பலுார் எஸ்.எஸ்.ஐ., செல்வராஜ், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் கோபி ஆகியோர் முன்னிலையில், செயினை உரிமையாளர் சுகந்தியிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை